Monday, November 22, 2010

செட்டிநாடு கறி குழம்பு


தேனக்காவின் குறிப்பை பார்த்து செய்தது.மிகவும் அருமையாக இருந்தது.
தே.பொருட்கள்:மட்டன் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 8
தக்காளி - 1
புளி கரைசல் - 1 கப்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 2
ஏலக்காய் -2
கறிவேப்பிலை - 1 இனுக்கு

அரைக்க:காய்ந்த மிளகாய் - 10
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 10
கசகசா - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
பூண்டுப்பல் - 1

செய்முறை:*மட்டனை சுத்தம் செய்து சிறிந்தளவு நீரில் வேகவைக்கவும்.பூண்டு+வெங்காயம்+தக்காளி அரிந்து வைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் வெங்காயம்,பூண்டை தவிர சிறிது எண்ணெயில் வறுத்து ஆறவைத்து வெங்காயம்+பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டு+தக்காளி+அரைத்த மசாலா அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி புளிகரைசல்+உப்பு+வேகவைத்த மட்டன் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

*தீயை சிம்மில் வைத்து 20 நிமிடம் கழித்து இறக்கவும்.